[X] Close

புதிய சிபிஐ இயக்குனர் தேர்வு: முடிவின்றி முடிந்தது பிரதமர் கூட்டம்!

No-decision-on-new-CBI-chief--panel-discussed-79-names-put-in-two-lists

சிபிஐ-க்கு புதிய இயக்குனரைத் தேர்வு செய்வதற்காக, பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு வரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர். இதனால் மத்திய அரசு, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் பதவி ஏற்றார். பின்னர் அவரை தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. இதனால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.


Advertisement

இதற்கிடையே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட ராகேஷ் அஸ்தானாவையும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து மத்திய அரசு நீக்கியது. தற்போது சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை எதிர்த்தும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் கூட்டம், பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று நடந்தது. இதில் காங்கி ரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோரும் பங்கேற்றனர். நீண்ட நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

இதில் இரண்டு லிஸ்ட்களில் இருந்த 79 அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. முதல் லிஸ்ட்டில் 19 அதிகாரிகளின் பெயரும் அடுத்த லிஸ்ட்டில் 60 அதிகாரிகள் பெயரும் இருந்தன. இவர்களின் பின்னணி மற்றும் அனுபவங்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு விவாதத்துக்கு பின், தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. இதற்காக, அடுத்த வாரமும் பிரதமர் தலைமையில் கூட்டம் நடக்க இருக்கிறது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close