திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர், ஒய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பீட்டர். இவரது மனைவி மரியதெரஸ். இவர்செக்கணம் அரசு துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியர். இவர்களது வீடு வையம்பட்டி பாலவிடுதி சாலையின் அருகில் உள்ளது. இன்று காலை மரியதெரஸ்
பள்ளிக்குச் சென்ற பின்னர், பீட்டர் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றார். பிற்பகல் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இதனால் தனது வீட்டிற்கு சொந்தக்காரர்கள் யாரும் வந்திருக்கலாம், வீட்டில் ஆள் இல்லாததால் அருகில் உள்ள தனது தம்பி வீட்டிற்குச் சென்றிருக்கலாம் எனஎண்ணிய பீட்டர், தனது தம்பி வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கு உறவினர்கள் யாரும் வரவில்லை. மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின்முன்பு நின்ற காரைக் காணவில்லை. வீட்டின் முன்கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பின்கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்துள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசில் பீட்டர் புகார் செய்தார். கொள்ளையர்களைப் பிடிக்க மணப்பாறை டி.எஸ்.பி ஆசைத்தம்பி தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Loading More post
'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்