Published : 08,Jan 2019 07:02 AM
வெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.
தற்போதைய காலக் கட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலும் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை பதிவு செய்யும் கேமரா கொண்ட போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. ஏனென்றால் தற்போதைய இளைஞர்கள் செல்ஃபி எடுப்பது மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே அதற்கேற்றவாறு தங்களை அழகாக காட்டும் கேமராக்களை கொண்ட போனிற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனை அறிந்து சியோமி தங்கள் புதிய ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. அதனை ‘ரெட்மி நோட் 7’ என்ற மாடலாக நாளை மறுநாள் அந்நிறுவனம் வெளியிடுகிறது. இதன் விலை சுமார் ரூ.11 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
சிறப்பம்சங்கள் :
ரேம் : 6 ஜிபி
டிஸ்ப்ளே : 6.26 இன்ச்
கைரேகை பதிவு : உண்டு
இண்டெர்நல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி
கேமரா : பின்புறம் 12 எம்பி + 5 எம்பி. ஆனால் 48 எம்பி சென்சார் உள்ளது.
செல்ஃபி கேமரா : 24 எம்பி
பேட்டரி : 4,000 எம்.ஏ.எச்