பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வது என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இடஒதுக்கீடானது அரசியலமைப்பு சட்டம் 15, 16 பிரிவுகளில் வருகிறது. அதாவது, சாதி, மதம், நிறம், பாலினம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு சம வாய்ப்பு அளிக்கவும், அவர்கள் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்யவும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. அரசுத் துறைகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுகிறது.
இதுவரை சாதி ரீதியாக, பாலின ரீதியாக இடஒதுக்கீடு இருந்து வந்த நிலையில் முதன்முறையாக பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் மூலன் அனைத்து பிரிவை சேர்ந்த மக்களும் பலன் அடைவார்கள். குறிப்பாக உயர் வகுப்பில் பொருளாதார மட்டத்தில் பின் தங்கியவர்கள் பயனடைவர் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், இடஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டுவர சட்டப் பிரிவு 15, 16இல் திருத்தங்களை கொண்டு வர வேண்டும். பின்னர், திருத்தங்கள் செய்த மசோதாவை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி இரு அவைகளிலும் ஒப்புதல் பெறவேண்டும். இதற்காகவே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாஜக அரசு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இருப்பினும், இதற்கான சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால் நிறைவேறாமல் போகவும் வாய்ப்புள்ளது.
பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கான நிபந்தனைகள்:-
* ஆண்டு வருமானம் ரூ8 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்
* 5 ஏக்கருக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும்
* 1000 சதுர அடிக்கு குறைவாக வீட்டு மனை இருக்க வேண்டும்
* நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் 109 கஜத்திற்கு குறைவாக இருக்க வீட்டுமனை வேண்டும்
* நகராட்சி அல்லாத பகுதியில் 209 கஜத்திற்கு குறைவான வீட்டுமனை இருக்க வேண்டும்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்