அஜீத் நடித்துள்ள படம் முதன்முறையாக ரஷ்யாவில் ரிலீஸ் ஆகிறது.
அஜீத்குமார், நயன்தாரா, சத்யராஜ், ஜெகபதிபாபு, பிரபு, ராஜ்கிரண் உட்பட பலர் நடித்துள்ள படம், ’விஸ்வாசம்’. டி.இமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சிவா இயக்கியுள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்தப் படத்தை பல்வேறு நாடுகளில் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் முதன்முறையாக அஜீத் படம் ரஷ்யாவில் வெளியாகிறது. அங்கு, ரஜினியின் ’கபாலி’, ’2.0’, விஜய்யின் ’சர்கார்’ படங்கள் ஏற்க னவே ரிலீஸ் ஆகியுள்ளன. இந்நிலையில் ’2.0’ படத்தை ரஷ்யாவில் வெளியிட்ட பிரசாந்த், ’விஸ்வாசம்’ படத்தை ரஷ்யாவிலும் உக்ரைனிலு ம் வெளியிடுகிறார்.
‘’ரஷ்யாவில் 8 நகரங்களில் விஸ்வாசம் வெளியாகிறது. ஒரு தமிழ்ப்படம், இத்தனை நகரங்களில் வெளியாவது இதுதான் முதன்முறை. இன்னும் சில நகரங்களில் வெளியிட சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படத்துக்கு அங்கு வரவேற்பு இருப்பதால், ரிலீஸ் நேரத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்’’ என்றார் பிரசாந்த்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்