[X] Close

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயற்சி

Youth-who-Gave-HIV-Infected-Blood-to-Pregnant-Woman--attend-suicide

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை முயன்றுள்ளார். 


Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவரது ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்தபோது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.


Advertisement

இந்நிலையில், கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்றுடன் கூடிய ரத்தம் செலுத்தப்பட்டு, அவருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவருக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

        

இந்நிலையில், கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலை கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற அந்த இளைஞர், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close