[X] Close

பீகாரில் பாஜக - லோக் ஜன்சக்தி இடையே தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு

BJP-Seat-seating-process-finalised-in-Bihar-with-Lok-Janshakti

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக பீகாரில் லோக் ஜன்சக்தி மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Advertisement

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பாஜகவை வீழ்த்த இப்போதே எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி பேச்சுகளும் அடிபடுகின்றன. நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலிலும் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்து. இதனால் நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து அக்கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக மற்றும் லோக் ஜன்சக்தி இடையே நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு சுமூகமாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Advertisement

தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையில் முதலில் இழுபறி நீடித்து வந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து மத்திய அமைச்சரும், லோக் ஜன்சக்தி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் அவரது மகன் சிராக் பாஸ்வாக் ஆகியோர் பாஜக மூத்த தலைவரான அருண் ஜேட்லியை சந்தித்து பேசினர். இதன்பின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதியில் லோக் ஜன்சக்தி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதேசமயம் உத்தரப்பிரதேசத்திலும் ஒரு சீட்டை பெற லோக் ஜன்சக்தி முனைப்புடன் உள்ளதாக தெரிகிறது. அப்படி உத்தரப்பிரதேசத்தில் ஒரு சீட் கொடுக்க வேண்டும் என்றால் பீகாரில் ஒரு சீட்டை குறைக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

முன்னதாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடும் என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்திருந்தார். தற்போது பாஜகவில் அங்கம் வகிக்கும் லோக் ஜன்சக்திக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி 31 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பட்டியில் இன மக்கள் செல்வாக்கு லோக் ஜன்சக்தி கட்சிக்கு இருப்பதால் அதன் உடன் சுமூக உடன்பாட்டை பாஜக மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close