விஸ்வாசம் திரைப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
நடிகர் அஜித்தை வைத்து இயக்குநர் சிவா வீரம், வேதாளம், விவேகம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவர் அஜித்துடன் 4 முறையாக கூட்டணி சேர்ந்த திரைப்படம் விஸ்வாசம். 4 வது முறையும் கூட்டணி சேர்ந்ததால் அதிக எதிர்பார்ப்பு உருவாகியது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மோஷன் போஸ்டர் விடப்பட்டாலும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இதைத்தொடர்ந்து அவ்வப்போது படப்பிடிப்பு புகைப்படங்கள், அஜித்தின் புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் லீக் ஆகி ட்ரெண்ட் ஆகும். விஸ்வாசம் மூலம் முதன்முதலாக அஜித்துக்கு இசையமைக்கிறார் இமான். படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தில் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ‘அடிச்சு தூக்கு’ என்ற பாடலை வெளியிட்டு விருந்தளித்தது படக்குழு.
குத்துப்பாடலான அடிச்சுத்தூக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடலான, வேட்டிகட்டு எனும் பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. இந்நிலையில் படத்தின் மொத்த பாடலும் இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பொதுவாக அஜித் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்பதால் விஸ்வாசம் படத்தின் பாடல்களும் வழக்கம்போல் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே வெளியான இரண்டு பாடல்களும் ஹிட் அடித்துள்ள நிலையில் அடுத்தடுத்த பாடல்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி