[X] Close

காஷ்மீரில் கடும் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

10-killed-in-Kashmir-after-encounter--situation-tense

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், ஒரு ராணுவ வீரர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.


Advertisement

தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சிர்னு என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கிராமத்துக்கு இன்று அதிகாலையில் சென்ர பாதுகாப்புபடையினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். அப்போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் தொடுத்தனர். இருதரப்பும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.


Advertisement

இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், துப்பாக்கிச் சண்டையில் பொதுமக்கள் 5 பேரும் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தனர். பொதுமக்களில் 5 பேர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒருவர் யார் என்பது தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.  

தீவிரவாதிகள் இன்னும் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த  சம்பவத் தை யொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புல்வாமா மாவட்டத்தில் இணையதள சேவையும் காஷ்மீர்- பனிஹால் இடையிலான ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close