[X] Close

டிச.15,16ல் வடதமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

Rain-may-hits-tamilnadu-north-districts-in-december-mid

வரும் 15, 16 ஆம் தேதிகளில் வடதமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகத்தை நோக்கி நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே டிசம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு ‌மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பில் இருக்கும் மீனவர்கள் மாலைக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close