Published : 29,Nov 2018 02:30 AM

பொருளாதார வளர்ச்சியை கணக்கிடும் முறை மாற்றம்.. காங்கிரஸ் ஆட்சியின் வளர்ச்சி குறைப்பு..!

Modi-government-has-Changed-The-method-of-calculation-in-GDP-

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பதிவான நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவை மத்திய அரசு குறைத்துள்ளது.

2011-12 ஆண்டை அடிப்படையாக கொண்டு நாட்டின் மொத்த உற்பத்தியை மத்திய புள்ளியல்துறை கணக்கிட்டுள்ளது. இதன்படி 2010-2011-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக 2004-2005-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கின்படி 2010-2011ம் ஆண்டில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.3 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக கருதப்பட்டது. இதேபோல் 2005-2006 மற்றும் 2006-2007-ம் ஆண்டுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சியை மந்திய அரசு குறைத்து கணக்கு வெளியிட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சராசரி வளர்ச்சி 6.7 சதவீதம்தான் என்றும் அது பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் பதிவான 7.35 சதவீத வளர்ச்சியை விட குறைவு எனவும் பாரதிய ஜனதா கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்