[X] Close

“நல்ல மனதுள்ள சாமானியர்களில் 59% பேர் போலீசாரின் தொல்லைக்கு ஆளாகுகின்றனர்”- ஆய்வறிக்கை..!

59--of-good-samaritans-face-cop-harassment--Report

நல் உள்ளம் படைத்த சாமானியர்களில் 59 சதவீதம் பேர் போலீசாரின் தொல்லைக்கு ஆளாகுவதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

சேவ் லைப் பவுண்டேஷன் என்கிற அமைப்பு  நகர மக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் இந்தியாவில் 10-ல் 8 மக்கள், ‘2016 சாமானியரின் சட்டம்’ குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது முதலுதவி செய்தால் போலீசாரின் தொல்லைக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சம் இல்லாமல் உதவி செய்ய இச்சட்டம் ஊக்குவிக்கிறது.


Advertisement

ஆனால் இச்சட்டம் குறித்து சென்னையில் 93 சதவீத மக்கள் தெரியாமல் உள்ளனர். அதேசமயம் 92 சதவீத பெங்களூரு மக்களும், 89 சதவீத ஹைதரபாத் மக்களும் இச்சட்டம் என்னவென்று கேட்கும் நிலையில் தான் உள்ளனர். ஆனால் 29 சதவீத இந்தூர் மக்கள் இச்சட்டம் குறித்து நன்கு தெரிந்து வைத்துள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக 28 சதவீத ஜெய்ப்பூர் மக்கள் இச்சட்டம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்.

பொது இடங்களில் யாருக்காவது ஆபத்து என்றால் உதவி செய்ய விருப்பப்படுபவர்களின் சதவீதம் கடந்த 2013-ஆம் ஆண்டு 26 சதவீதம் என்கிற நிலையில் இருந்துள்ளது. ஆனால் தற்போது அது 88 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும் ஆபத்தான இடத்தில் உதவுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. போதிய அளவில் இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லாதது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.


Advertisement

2016 சாமானியர் சட்டப்படி, பொதுஇடங்களில் யாருக்காவது ஆபத்து என்றால் யார் வேண்டுமானாலும் போலீசாரை தொலைபேசியில் அழைக்கலாம். அழைப்பவர்கள் தங்களின் முகவரி உள்ளிட்ட அடையாளங்களை கட்டாயமாக போலீசாரிடமோ, அலலது மருத்துவமனையிடமோ தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை. சாட்சியாக சொல்ல முன்வருபவர்களிடம் போலீசார் மிகுந்த அக்கறையுடன் நடக்க வேண்டும்.

ஆனால் அப்படி உதவி செய்யும் நல் உள்ளம் படைத்தவர்களில் 59 சதவீத பேர் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு ஆளாவதாகும் ஆய்வறிக்கை கூறுகிறது. போலீசாரும் அவர்களை கைது செய்வதை ஒப்புக்கொள்வதாக அந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

Courtesy: The Times of India


Advertisement

Advertisement
[X] Close