[X] Close

அமெரிக்காவில் இந்தியரைச் சுட்டுக்கொன்ற சிறுவன்!

Indian-Man--Shot-Dead-In-US

அமெரிக்காவில் காரை திருட வந்த சிறுவன், இந்தியரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியின் வென்ட்னர் பகுதியில் வசித்து வந்தார். இவர் அட்லாண்டிக் சிட்டி பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆடிட்டராக பணியாற்றினார்.


Advertisement

கடந்த 15ம் தேதி இரவு, பணிக்கு செல்வதற்காக, வீட்டிலிருந்து வெளியே காரில் வந்த சுனிலை, 16 வயது அமெரிக்க சிறுவன் நிறுத்தினார். பின்னர் துப்பாக்கி முனையில் காரில் இருந்து இறங்க சொல்லிவிட்டு, காரில் ஏறினார். திடீரென சுனிலை சுட்டுவிட்டு காரோடு தப்பியோடிவிட்டான். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுனில் உயிரிழந்தார். 

இதையடுத்து ஆறு கி.மீ தொலைவில் நின்றிருந்த அவரது காரை கைப்பற்றிய போலீசார் அந்த சிறுவனையும் கைது செய்துள்ளனர். எதற்காக இந்த கொலையை செய்தான் என்பது பற்றி நியூஜெர்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement

1987 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் வசித்து வரும் சுனில் எட்லா, அடுத்த மாதம் தனது அம்மாவின் 95 வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ளவும் கிறிஸ்துமஸ் விழாவுக்காகவும் இந்தியா வர இருந்தார்.

அவரை எதிர்பார்த்து குடும்பத்தினர் காத்திருந்தனர். இந்நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

‘காரை எடுத்துக்கொண்டு என் அப்பாவை அவன் உயிரோடு விட்டிருக்கலாம்’ என்று சுனிலின் மகன் மோரீஷன் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close