தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற நடிகர் விஜயராஜ் மாரடைப்புக் காரணமாக இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 43.
பழனியை சேர்ந்தவர் விஜயராஜ். இவர் சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வந்த இவர், சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் திருமுருகன் இயக்கிய ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’, ’நாதஸ்வரம்’ தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இதன் மூலம் பிரபலமானார். திருமுருகன் இயக்கிய ‘எம்மகன்’ சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார்.
தீபாவளி பண்டிக்கைக்காக இரண்டு நாட்களுக்கு முன் தனது சொந்த ஊரான பழனிக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றார். இன்று காலை அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது மறைவைக் கேட்டு சின்னத்திரை கலைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Loading More post
ஜம்முவில் ஏ47 துப்பாக்கியுடன் பிடிபட்ட தீவிரவாதி பாஜக நிர்வாகியாக இருந்தவர்-பரபரப்பு தகவல்
”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” - ஆ.ராசா!
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
தோனி மீது இவ்வளவு சர்ச்சைகளா?.. களத்தில் நிகழ்ந்த டாப் 5 தரமான சம்பவங்கள்!
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?