[X] Close

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி

PM-Modi-attends-NHRC-Silver-Jubilee-Foundation-Day-function

இரவு நேரங்களில் பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் படி விசாரணை நடத்தவும், நாட்டில் நடைபெறும் சில அத்துமீறல்கள் தொடர்பாக தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தவும் அதிகாரம் உள்ள அமைப்பாக தேசிய மனித உரிமை ஆணையம் இயங்கி வருகிறது. இந்த ஆணையம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளிவிழா மற்றும் ஆண்டு கொண்டாட்ட விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி அதற்கான சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். பின்னர் பேசிய பிரதமர், சமுதாயத்தில் குறுகிய மனம் படைத்த சிலர், பெண் குழந்தைகள் தேவையற்றவர்கள் எனக் கூறி அவர்களை கருவிலேயே கலைத்து வந்ததாக தெரிவித்தார். மத்திய அரசின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தால் பல மாநிலங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.


Advertisement

இரவு நேரத்தில் பணி புரியும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு தமது அரசு உழைத்துள்ளதாகவும், இரவுப் பணியின் போது அவர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close