Published : 02,Apr 2017 04:19 AM

விசில் போடு: அடுத்த ஐபிஎல்லில் சிஎஸ்கே

Chennai-superkings-Back-in-2018-IPL

தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடும் என்று அதன் உரிமையாளர் என்.சீனிவாசன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நிகழ்ந்த ஊழல் புகார்கள் குறித்து விசாரித்த லோதா கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்ற அணிகளில் விளையாடினர். இந்நிலையில் இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட இருக்கிறது.

இதுபற்றி அணியின் உரிமையாளர், இந்தியா சிமென்ட்ஸ் என்.சீனிவாசன் கூறும்போது, ’2018-ல் மஞ்சள் உடையுடன் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும். நிச்சயம் பிரமாண்டமாக வருவோம்’ என்று தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்