Published : 11,Oct 2018 02:55 AM

கரையை கடந்தது ‘டிட்லி’ புயல்.. 150 கி.மீ வேகத்தில் பலத்த காற்று

Cyclone-Titli-Hits-Odisha-Coast-At-140-150-Kmph

அதி தீவிர புயலான டிட்லி ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே கரையை கடந்தது.

இதனால், கஞ்சம் மாவட்டத்தில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. மேலும், கடலோர மாவட்டங்களான கஞ்சம், புரி, கேந்தரபரா, ஜகத்சிங்பூர், குர்டா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்ததால், மின்கம்பங்கள், மரங்கள் ஆங்காங்கே சாய்ந்துள்ளன. வீடுகளின் மேற்கூரைகளும் ஆற்றில் அடித்து செல்லப்படுகின்றன.

தாழ்வான பகுதியில் வசித்து வந்த 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடமேற்கு திசையில் டிட்லி புயல் நகர்ந்து வருகிறது. புயலில் தாக்கம் இன்று மாலை வரை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் ஒடிசா மாநில பேரிடர் மீட்புக்குழுவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்பதற்காக 300 படகுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 836 முகாம்களில், தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்