Published : 01,Oct 2018 06:02 AM

ஹிந்தி தெரிந்த தமிழர்கள் எண்ணிக்கை உயர்வு

The-number-of-Tamil-People-is-increases-in-who-know-speak-Hindi

தமிழகத்தில் ஹிந்தி மொழி பேசத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 50% வரை அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

2001 ஆம் ஆண்டில் இருந்ததை காட்டிலும் 2011 இல் ஹிந்தி தெரிந்த தமிழர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. 2001ம் ஆண்டு ஹிந்தி தெரிந்த தமிழர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 90 ஆயிரத்து 50 ஆக இருந்த நிலையில் 2011ல் இது 10 லட்சத்து 32 ஆயிரத்து 41 ஆக அதிகரித்திருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் அதிகரிப்பும் பள்ளிகளில் 2 அல்லது 3வது மொழிப்பாடமாக ஹிந்தியை கற்பவர்கள் அதிகரித்ததுமே, அம்மொழி தெரிந்தவர்கள் எண்ணிக்கை உயர காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read Also -> ஆலந்தூர் - டிஎல்எஃப் வரை வேன் சேவை.. பயணிகளை கவர சென்னை மெட்ரோவின் பிளான்..!  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்