பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கடந்த ஆண்டில் பயங்கரவாதத்தின் நிலை குறித்த அறிக்கையை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் பயங்கரவாத தடுப்பில் அமெரிக்கா மற்றும் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் இந்தியா உறுதியுடன் ஒத்துழைப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய மாநிலங்கள் சிலவற்றில் பயங்கரவாத தாக்குதல்களை இந்தியா சந்தித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் இந்தியாவில் நீடித்ததாக கூறியுள்ள அமெரிக்கா, கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவிகிதம் இந்தியா உள்ளிட்ட 5 ஆசிய நாடுகளில் நடந்ததாகவும் தெரிவித்துள்ளது. எனினும், கடந்த ஆண்டில் உலக அளவில் பயங்கரவாத தாக்குதல்கள் 23 சதவிகிதம் குறைந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?