Published : 16,Sep 2018 04:18 AM

திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் யார்?: வெளியானது சிசிடிவி காட்சிகள்..!

Release-CCTV-footage-for-Bike-Theft-in-Salem

சேலம் மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சேலம் கோட்டை பகுதியில் குறுகலான வீதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் கடந்த 11 தேதியன்று அப்துல் தாஜிம் என்பவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை திருட முயன்றுள்ளார். வாகனத்தை சிறிது தூரம் தள்ளிச்சென்ற அந்த நபர் பழைய வாகனம் என்பதால் அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் மற்றொரு வாகனத்தை திருட முயல்கிறார். ஆனால் அந்த வாகனத்தை திறக்க முடியாமல் அங்கிருந்து நகர்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அப்துல்தாஜிம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அன்றைய தினமே அதே பகுதியில் ரஃபியுதீன் என்பவரது இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர காவல் ஆணையரின் நேரடி பார்வைக்கு இணைய வழி புகார் மற்றும் குற்றப்பிரிவில் நேரடிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த 11 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து 13 ஆம் தேதி அதே கோட்டை பகுதியில் மீண்டும் ஒரு இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. இதனிடையே, கோட்டை பள்ளிவாசலில் இருந்த இரண்டு யுபிஎஸ் பேட்டரிகளும் திருடப்பட்டுள்ளன. தொடரும் திருட்டு சம்பவங்களால் அச்சத்தில் உள்ள கோட்டை பகுதி மக்கள் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்