[X] Close

ட்ரூ காலர் ஆப்பிலும் இனி ரீசார்ஜ், வீடியோ காலிங் வசதி

Truecaller-now-lets-you-recharge-your-phone--make-video-calls

ட்ரூ காலர் ஆப்பிலும் இனி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் வீடியோ காலிங் வசதியும் இதில் வருகிறது.

இது ஸ்மார்ட்போன்களின் காலம். அவற்றின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப சந்தையில் பல்வேறு செயலிகளும் (ஆப்) உருவாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட செயலிதான் ‘ட்ரூ காலர்’. அதாவது, நம்முடைய மொபைலில் பதிவு செய்யாத எண்ணில் இருந்து அழைப்பு வரும்போது, யார் அழைக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் செயலிதான் ட்ரூ காலர்.

இந்நிலையில் ட்ரூ காலர் ஆப்பில் மேலும் பல சிறப்பம்சங்கள் வருகிறது. இனி மொபைல் ரீசார்ஜையும் இதன் மூலம் செய்து கொள்ளலாம். இதற்காக ஐசிஐசிஐ வங்கியுடன் இது டையப் வைத்துள்ளது. ட்ரூ காலர் ஆப்பை தற்போது கிட்டத்தட்ட 15 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பரிவர்த்னையை நாளுக்கு நாள் அதிகரிக்கும் இத்தகைய நாளில், இந்த வசதியை ட்ரூ காலர் செய்து கொடுத்துள்ளது. மேலும் வீடியோ காலிங் வசதியும் செய்து கொடுக்கிறது ட்ரூ காலர். இதற்காக கூகுள் நிறுவனத்துடன் டையப் செய்யப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close