மகளின் நிச்சயதார்த்தத்திற்கு பணம் தர மறுத்த லாரி உரிமையாளரை கொலை செய்து விட்டு, 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2000-ஆம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள ஏரியில், லாரி உரிமையாளர் தவர்சிங், லாரி ஒட்டுநர் மங்குபாய், கிளீனர் பிரேம் சந்த் ஆகிய 3 பேரும் குளித்துள்ளனர். அப்போது, லாரி ஓட்டுநர் மங்குபாய், தமது மகளின் நிச்சயதார்த்தத்திற்கு பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு லாரி உரிமையாளர் தவர்சிங் மறுக்கவே, அவரை இரும்பு ராடால் தலையில் அடித்து விட்டு, அவர் வைத்திருந்த ₹50000 பணத்தை எடுத்துக் கொண்டு, அந்த ஏரிக்கரையிலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இருவரும் தப்பிய நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, லாரி உரிமையாரின் எரிந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார், தலைமறைவாக இருந்த லாரி கிளீனர் பிரேம் சந்தை கைது செய்தனர்.
எனினும், முக்கிய குற்றவாளியான மங்குபாய் தலைமறைவானதையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், மங்குபாய், மஹாராஷ்டிராவில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே, அங்கு சென்ற தனிப்படை போலீசார், குடும்பத்துடன் வசித்து வந்ததை கண்டு கைது செய்து தமிழகம் கொண்டு வந்தனர். பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் மங்குபாயை ஆஜர்படுத்திய போலீசார், பின் புழல் சிறையில் அடைந்தனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு, கொலை குற்றவாளியை கைது செய்த போலீசாரை, பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!