Published : 25,Mar 2017 08:05 AM
மரத்தில் ஏறி விவசாயிகள் போராடியதால் பரபரப்பு

டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 2 வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வறட்சி நிவாரணத் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நடிகர் விஷால், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று இன்றும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் டெல்லியில் திடீரென விவசாயிகள் மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடிகர் விஷால் உள்ளிட்டோர் மரத்தில் இருந்து விவசாயிகளை கீழிறங்கும் படி வேண்டுகோள் விடுத்தார். இதைப்போன்று, மக்களவை துணை சாபாநாயகர் தம்பிதுரை, விவசாயிகள் தற்கொலை முயற்சியை கைவிட வேண்டும் என தெரிவித்தார். மத்திய இணையமைச்சர் பொன்.ரதாகிருஷ்ணன், மரத்தில் ஏறி போராட்டம் நடத்தும் விவசாயிகள் உடனடியாக கீழிறங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்..
இதனையடுத்து ஒவ்வொரு விவசாயிகளாக கீழிறங்கினர். பின்னர் பேசிய விவசாயிகள், டெல்லிக்கு வந்த கிட்டத்தட்ட 13 நாட்களாகிறது. ஆனால் எங்களின் கோரிக்கையை யாரும் கண்டுகொண்டபடி இல்லை. விவசாயிகள் என்ன அகதிகளா? என கேள்வி எழுப்பினர்.