திமுக தலைவர் கருணாநிதி தூங்கிக் கொண்டிருந்ததால் அவரை பார்க்கவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி 4ஆவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28ஆம் தேதி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நலம் குறித்து, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளனர்.
இன்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்து விசாரித்து சென்றார். இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நலம் விசாரித்தார். கருணாநிதியின் உடல்நலம் தொடர்பாக விசாரிப்பதற்காக டேராடூனில் இருந்து சென்னை வந்த ரஜினிகாந்த், நேராக காவேரி மருத்துவமனை சென்றார். அங்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து, கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தேன். அவர்களுக்கு ஆறுதல் கூறினேன். அவர் உடல்நிலை குணைமடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். அவர் தூங்கிக்கொண்டிருந்தார், அதனால் பார்க்கமுடியவில்லை” என்று கூறினார்.
Loading More post
இந்தியாவில் டெஸ்லா கார்கள் உற்பத்தி இல்லை: எலான் மஸ்க் அறிவிப்பின் காரணம் என்ன?
‘குளங்கள் அமைந்திருக்கும் அனைத்து மசூதிகளிலும் ரகசிய ஆய்வு’ - உச்சநீதிமன்றத்தில் மனு
‘பணிகளில் சுணக்கம் காட்டாதீர்கள்’-கலெக்டர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அட்வைஸ்
பேத்தியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வழக்கு - உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை
முதல்வரின் திடீர் கள ஆய்வு எதிரொலி: அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தலைமைச் செயலாளர்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!