Published : 30,Jul 2018 08:26 AM
உயிருக்கு போராடும் தங்கம் வென்ற தடகள வீரர்: அரசின் நிதியுதவியை எதிர்பார்க்கும் குடும்பம்..!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த முன்னாள் தடகள வீரர் ஹகம் சிங் பட்டல் உயிருக்குப் போராடி வருகிறார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹகம் சிங் என்ற தடகள வீரர் கடந்த 1978-ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டின் 20 கிலோ மீட்டர் நடைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். ராணுவத்தில் ஹவில்தார் மற்றும் பஞ்சாப் மாநில காவல்துறையில் பணியாற்றி கடந்த 2014-ஆம் ஓய்வு பெற்றார்.
விளையாட்டுத் துறையில் ஹகம் சிங்கின் சாதனையைப் பாராட்டி கடந்த 2008-ஆம் ஆண்டு தயான் சந்த் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஹகம் சிங் கணையம் மற்றும் சிறுநீரகப் பிரச்னையால் சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்குப் போராடி வரும் அவருக்கு விளையாட்டு அமைப்புகள் மற்றும் அரசு நிதியுதவியை அளிக்க வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.