[X] Close

வேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்து: பிரபல நடிகர் கைது!

Actor-Siddharth-Shukla-arrested-for-rash-driving

சொகுசு காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நடிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் நேற்று மாலை பிஎம் டபிள்யூ சொகுசு கார் ஒன்று நேற்று மாலை வேகமாக சென்றது. இதைக் கண்டு சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஸ்ரீஜி ரெஸ்டாரண்ட் அருகே சொகுசு கார் வேகமாக சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்தது. பின், அருகில் வந்த இன்னோவா  மீது மோதியது.


Advertisement

அதையடுத்து வந்த மேலும் இரண்டு கார்களின் மீது மோதிய பிஎம்டபிள்யூ கார், சென்டர் மீடியனில் பயங்கர சத்தத்துடன் மோதி நின்றது. மோதிய வேகத்தில் காரில் இருந்து புகை கிளம்பியது. காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், சொகுசு கார் கதவை திறந்து உள்ளே இருந்தவரை மீட்டனர். லேசாக மயங்கிய நிலையில் இருந்த அவர், பிரபல சின்னத்திரை நடிகர் சித்தார்த் சுக்லா என்பது தெரிய வந்தது. சில சினிமா படங்களிலும் அவர் நடித்துள்ளார். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அவர் மது அருந்தியிருக்கிறாரா? என்று சோதனை செய்தனர். இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close