[X] Close

ட்விட்டரில் தொடரும் திமுக V/S பாஜக யுத்தம் - இப்போது இதுதான் ட்ரெண்ட்

-ZeroMpDMK-Trending-On-Twitter-in-national-level

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல் மாதம், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகத்திற்கு வந்தார். அப்போது திமுக உள்ளிட்ட கட்சியினர் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், #GoBackModi என்ற வாசகத்தை எழுதிக் காட்டியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவங்களின் உச்சமாக திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவரது தொகுதியான சைதாப்பேட்டையில், #GoBackModi என்ற வாசகம் எழுதப்பட்ட பிரம்மாண்ட கறுப்பு பலூனை பறக்கவிட்டார். அன்றைய தினம் #GoBackModi என்பது சென்னை, இந்திய அளவில் ட்ரெண்டாகியது. ஒருகட்டத்தில் அது உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது. 

              

இதுமட்டுமின்றி சமீபத்தில் சென்னை அருகே நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தார். அப்போது #GoBackAmitsha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. அது இந்திய அளவிலும் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்தது. 


Advertisement

இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து வருவதை எதிர்த்து ட்விட்டரில், பாஜக ஆதரவாளர்கள் #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கை பரப்பினர். அதுவும் சென்னை அளவிலான ட்ரெண்டிங் லிஸ்ட்டில் இடம்பிடித்தது. அதற்குள் திமுக ஆதரவாளர்கள் #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்கை பரப்பினர்.

                      

இருதரப்பிற்கு இடையே ட்விட்டர் மோதல் வெடித்தது. இருவரும் தங்கள் தரப்பிலிருந்து எதிர்ப்புகளையும், ஆதரவுகளை தெரிவித்து ட்விட்டர்களை தீவிரமாக பதிவிட்டனர். 


Advertisement

இந்நிலையில், திமுக, பாஜக இடையே மீண்டும் ட்விட்டர் மோதல் ஏற்பட்டுள்ளது. #ZeroMpDmk, #ZeroGoverenenceBJP ஹேஷ்டேக் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகிறது. நாடாளுமன்றத்தில் பாஜவுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதற்கு, திமுக ஆதரவு தெரிவித்ததோடு, அதிமுகவையும் ஆதரிக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதனால், #ZeroMpDmk என்ற ஹேஷ்டேக்கை பாஜகவினர் ட்ரெண்ட் செய்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக ஆட்சி குறித்து  #ZeroGoverenenceBJP-ஐ திமுகவினர் ட்ரெண்ட் செய்தனர். இந்த இரண்டு ஹேஷ்டேக்கில் இருதரப்பிற்கு இடையே ட்விட்டர் மோதல் வெடித்துள்ளது.

                             


Advertisement

Advertisement
[X] Close