Published : 02,Jul 2018 04:54 PM

முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - யார் அந்தச் சிறுவன் ?

A-Bomb-Threatened-phone-call-for-CM-Palanisamy-House

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கிரீன்வேஸ் சாலியில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது, ஒரு தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட, முதலமைச்சர் வீட்டிலும், ரஜினிகாந்த் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்ட அது வதந்தி என கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்திற்கு பிறகு முதலமைச்சர் பழனிசாமியின் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை காவல்துறைக்கு வந்த அழைப்பில், முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு நபர் பேசியுள்ளார். அந்த நபரின் குரலை வைத்து பார்க்கும் போது, அவர் ஒருவர் சிறுவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த நம்பரை கண்டுபிடித்து போன் செய்த போது, அச்சிறுவன் பெயர் மற்றும் முகவரியை கூறி, தான் ஈரோட்டை சேர்ந்தவர் என்று கூறியதாக தெரிகிறது. அந்தச் சிறுவன் யார் என்று கண்டுபிடிக்குமாறு ஈரோடு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்