அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்புக்கு பிறகு வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும்,வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரின் செண்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இன்று சந்தித்தனர். உலகமே உற்றுநோக்கிய இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் ட்ரம்பும், கிம் ஜாங் உன்னும் ஒருவரையொருவர் கைக்குலுக்கி வரவேற்றனர். இதனை தொடர்ந்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 48 நிமிடங்கள் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. பின்னர் இருவரும் வெளியே வந்து செய்தியாளர்களை பார்த்து கை அசைத்தனர்.
அப்போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தை மிகவும் நன்றாக அமைந்தது என்று ட்ரம்ப் கூறினார். இந்த சந்திப்பு மிகப்பெரிய சிக்கலுக்கு தீர்வு காண வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தை சமாதானத்திற்கு வழிவகுக்கும் என நம்புவதாக கிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இரு நாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகள் இடையே மிக விரைவாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இந்த உலகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க உள்ளதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறினார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!