[X] Close

செல்போனை சட்டைப்பையில் வைப்பவர்களா நீங்கள்? ஜாக்கிரதை - இப்படியும் நடக்கலாம் ! வீடியோ

Mobile-phone-blasts-in-mans-pocket-in-Mumbais-Bhandup

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்‌ உள்ள உணவு விடுதியில் ஒருவர் உணவு அருந்திக்கொண்டிருந்தபோது, அவரது சட்டைப்பையில் இருந்‌த செல்போன் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பந்துப் பகுதியில் உள்ள உணவு விடுதியில் ஜுன் 4ம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அனைவரையும் போன்று சட்டைப்பையில் தனது செல்போனை வைத்துக்கொண்டு ஒருவர் உணவு அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென எதிர்ப்பாராத நிலையில் செல்போன் வெடித்தது. உடனே சுதாகரித்த அந்தநபர் தனது சட்டைப்பையில் இருந்த செல்போனை வெளியே எடுத்து வீசினார். எனினும் அந்நபர் லேசான காயத்துடன் தப்பினார். 

செல்போன் வெடித்த நேரத்தில் அந்த இடமே புகை மண்டலமாக மாறியது. செல்போன் வெடித்த உடன் மற்றவர்களும் பதறி போய் தங்கள் இடத்தில் இருந்து தெறிச்சு ஓடினர். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

             

முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஒடிசா மாநிலத்தின் கெரியா கானி மாவட்டத்தில் செல்போன் போன் பேசிக் கொண்டிருந்த போதே இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். செல்போனை சார்ஜ் போட்டபடியே அந்த இளைஞர் பேசிக் கொண்டிருந்த போது இந்த விபரீதபம் நிகழ்ந்தது.

அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், டெல்லி-இந்தூர் இடையேயான ஜெட்-ஏர்வேஸ் விமானத்தில் சென்ற பயணி ஒருவரின் செல்போன் வெடித்தது. டெல்லியைச் சேர்ந்த அந்த பயணி காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு, போனை கீழை இருந்த பையில் வைத்திருந்தார். அப்போது திடீரென பையில் இருந்து புகை வெளியானது. உடனடியாக அவர் ஊழியர்களின் உதவியை நாடியுள்ளார். தீப்பிடித்த செல்போனை விமான ஊழியர்கள் உடனடியாக தண்ணீரில் போட்டு அணைத்தனர். பின்னர், 120 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் உடனடியாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close