[X] Close

வழக்கறிஞரின் தந்தை வெட்டிக்கொலை: போலீஸ் இன்பார்மராக இருந்ததால் கொலையா? 

Chennai-60yr-Oldman-Brutally-Killed

 

சென்னையில் வழக்கறிஞரின் தந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் ரவுடி சின்னாவின் கூட்டாளியாக இருந்துள்ளார். இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடி சின்னாவின் மறைவுக்கு பிறகு இவர் திருந்தி வாழ்ந்தாக கூறப்படுகிறது. மேலும் இவர் காவல்துறையினருக்கு இன்பார்மராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள டீ கடைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் ராதாகிருஷ்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.


Advertisement

இதுகுறித்து புளியந்தோப்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராதாகிருஷ்ணன் போலீஸ் இன்பார்மராக செயல்பட்டு வந்ததால் முன்விரோதம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ராதாகிருஷ்ணனின் மகன் ஆந்திராவில் வழக்கறிஞராக உள்ளார். வழக்கு தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்து இருக்கலாமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close