[X] Close

கற்பனை உலகத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஸ்டாலின் : அமைச்சர் ஜெயக்குமார்

Stalin-is-happy-in-the-fantasy-world--Minister-Jayakumar

ஸ்டெர்லைட் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தோழமை கட்சிகளுடன் மாதிரி சட்டமன்றம் கூட்டத்தை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடத்தினர்.


Advertisement

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் திமுகவின் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாதிரி சட்டப்பேரவைக் கூட்டத்தை  நடத்தினர். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை ஏற்படுத்திக்கொண்டு சட்டப்பேரவையில் நிகழும் அலுவல்களை நிகழ்த்தினர். மாதிரி சட்டப்பேரவை கூட்ட சபாநாயகராக சக்கரபாணி தேர்வு செய்யப்பட்டு நிகழ்வுகளை நடத்தினார்.

 


Advertisement

இந்நிலையில் மாதிரி சட்டமன்றம் குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, “ஸ்டாலின் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை தினம் தினம் கூட்டி அறிவாலயத்தை தலைமை செயலகமாக மாற்றி ஸ்டாலின் கற்பனை உலகத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார். ஸ்டாலினுக்கு முதலமைச்சர் கனவு அதனால் ஆளுமை என்று நினைத்து அறிவாலயத்தை தலைமை செயலகமாக மாற்றி பேரவை அமைத்து டம்மி சபாநாயகரை போட்டு டம்மி முதலமைச்சராக நினைத்து, எல்லாமே டம்மியாக  சட்டப்பேரவையை நடத்தியுள்ளார். இதுபோல கற்பனை உலகத்தில் மகிழ்ச்சியாக இருத்தால் நல்லது” என்றார்.  


Advertisement

Advertisement
[X] Close