[X] Close

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரூ.300 வாடகையுடன் தங்குவதற்கு விடுதி திறப்பு

Former-MLAs-Hostel-Opened-in-Chennai

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கான புதிய விடுதி சென்னையில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியை, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், திறந்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் , முன்னாள் எம்எல்ஏக்களுக்கான புதிய விடுதி திறப்பு விழா நடைபெற்றது. ‌33 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் , 76 ஆயிரத்து 821 சதுர அடி பரப்பளவில் விடுதி கட்டப்பட்டுள்ளது. 10 மாடிகளைக் கொண்ட இந்த விடுதியில், மொத்தம் 68 அறைகள் உள்ளன. இதில் தமிழக முன்னாள் எம்எல்ஏக்கள் தங்க 60 அறைகளும், வெளிமாநில சட்டப்பேரவை குழுக்களைச் சேர்ந்தவர்கள் தங்க 8 அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு முன்னாள் உறுப்பினர் மாதத்திற்கு 5‌ நாட்கள் வரை மட்டுமே தங்க முடியும் என்றும், நாளொன்றுக்கு 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதியின் 10ஆவது மாடியில் , 250 பேர் பங்கேற்கும் வகையிலான கூட்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.


 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close