இங்கிலாந்தில் இந்திய வம்சாவளிப் பெண் கொல்லப்பட்ட வழக்கில் அவர் கணவர் கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் உள்ள மிடில்ஸ்ப்ரோ பகுதியைச் சேர்ந்தவர் மிடேஷ் படேல். இவரது மனைவி ஜெசிகா படேல். இருவரும் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் படித்தபோது காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில் ரோமன் ரோடு பார்மசஸி என்ற மருந்து கடையை கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.
இவர்கள் இந்தப் பகுதியில் பிரபலமானவர்களாக இருந்துள்ளனர். பார்மஸிக்கு அருகிலுள்ள அவென்யூவில் இவர்கள் வீடு இருக்கிறது. எப்போதும் பிசியாக இருக்கும் இந்த அவென்யூவில் உள்ள வீட்டில் கடந்த திங்கள்கிழமை பிணமாக கிடந்தர் ஜெசிகா. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
(கொலை நடந்த வீடு)
அதில் அவர், உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார், கொலையாளியைத் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கணவர்தான் ஜெசிகாவை கொன்றது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி