கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம், ’காளி’. வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் இந்தப் படத்தில் அஞ்சலி, சுனேனா, அமிர்த், கன்னடநடிகை ஷில்பா மஞ்சுநாத் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரும்பே’ பாடலில் நடித்துள்ள ஷில்பா மஞ்சுநாத் கூறியதாவது:
காளி படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாவது பெருமையாக இருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள அரும்பே பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் பார்வதி என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். நிஜ வாழ்வில் எப்படி இருப்பேனா, அதற்கு முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம்.
நான் மாடர்ன் சூழ்நிலையில் வளர்ந்த பெண். பார்வதி கேரக்டர் முற்றிலும் மாறுபட்டது. கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். பல்வேறு பருவத்தை பிரதிபலிக்கும் கேரக்டர். மனோதத்துவரீதியாக பலம் பொருந்திய கேரக்டர். இந்தப் படம் எனக்கு சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன். தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா, ஹீரோ விஜய் ஆண்டனி, மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஆகியோருக்கு கடமைப் பட்டுள்ளேன்.
இவ்வாறு ஷில்பா மஞ்சுநாத் கூறினார்.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!