[X] Close

ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல: வைரமுத்து

Vairamuthu-Comments-About-Bharathiraja-Issue

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பழிவாங்கும் செயல் என கவிஞர் வைரமுத்து சாடியுள்ளார். 

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், பாரதிராஜா மீது வழக்கு பதிந்திருப்பது பழிவாங்கும் செயல் என்று கூறியுள்ளார். வழக்கு பெரிதல்ல என்றும் ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல என்றும் கூறியுள்ளார். பாரதிராஜாவை சட்டப்படி மீட்டெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் கடந்‌த ஜனவரி 18ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, இந்து கடவுள் விநாயகர் குறித்து அவதூறாக பேசியதாக‌ காவல்நிலையத்தில்‌ புகார் அளிக்கப்பட்டது. ‌இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் அளித்த புகாரில், நீதிமன்ற உத்தவுபடி பாரதிராஜா‌ மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வடபழனி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close