Published : 30,Apr 2018 05:30 AM
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி

நெல்லையில் 7வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அமுதா நகரை சேர்ந்தவர் ஓட்டுநர் கருப்பசாமி. இவரது வீட்டிற்குள் அதிகாலை 3மணியளவில் நுழைந்த மர்மநபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த 7வயது சிறுமியின் வாயை மூடி தூக்கிச்சென்றுள்ளார். சுடுகாட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அந்த நபரின் பிடியில் இருந்து தப்ப முடியாத சிறுமி கூச்சலிட்டுள்ளார்.சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்குவிரைந்துள்ளனர். பொதுமக்கள் வருவதை கண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் ஊர் மக்கள் மடக்கி பிடித்தனர்.
அந்த நபர் நெல்லை பாளையஞ்செட்டிகுளத்தை சேர்த்த ஜஸ்டின் என்பது தெரியவந்தது. அந்த நபர் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியை காவல்துறையினர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படும் ஜஸ்டின் என்பவரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.