Published : 29,Apr 2018 11:48 AM

பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் பதில் இல்லை ! எடப்பாடி கே.பழனிசாமி

There-is-no-answer-to-the-Prime-Minister-s-meeting-time

காவிரி விவகாரம் தொடர்பாக பேச பிரதமரிடம் நேரம் கேட்டு பலமுறை கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 சேலத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மணிமண்டபம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டியப்பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தாததால் அது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், 3ஆம் தேதி சாதகமான முடிவு கிடைக்கும் எனவும் நம்பிக்கை வெளிபடுத்தினார். மேலும் காவிரி விவகாரத்தில் தமிழக குழுவை சந்தித்து பேச பிரதமரிடம் நேரம் கேட்டு பலமுறை கடிதம் அனுப்பியும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்