உத்தரப்பிரதேசத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனத்தில் பெயின்ட் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அவசர மருத்துவ சிகிச்சைகாக 108 ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் சுகாதாரம் மருத்துவ சேவை உள்ளிட்டவை குறித்து ஏராளமான புகார்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. ஆம்புலன்ஸ் தாமதத்தால் நடுவழியில் பிரசவம் நடந்தது, மருத்துவமனை வளாகத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டரை தோளில் சுமந்தபடி தாயும் மகனும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருந்தது என்பது போன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கன்னுஜ் மாவட்டத்தில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று பெயின்ட் டப்பா, கயிறு, பைப் போன்ற வன்பொருட்களை ஏற்றிச் சென்றது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து அரசு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் ஆம்புலன்சில் பழுது இருந்ததால் இதன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், கட்டுப்பாட்டு அறைக்குத் தெரியாமல் வாகனத்தில் வன்பொருள் ஏற்றிச் சென்றதும் தெரியவந்தது.
இதேபோல் கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடைப்பெற்றது. மீரட் நகரில் லாலா லஜபதிராய் மருத்துவ கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் பல சிறந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.அப்போது அங்கு இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்