[X] Close

பணம் தர மறுத்ததால் அக்கா கணவரை தாக்கிய மைத்துனர் ! போலீஸாரின் அலட்சியம்

A-death-of-the-victims-Sister-s-husband-attacked-her-brother

சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை மா.பொ.சி.தெருவில் வசித்து வருபவர் ரவி (50). இவரிடம் கடந்த 19 ஆம் தேதி இரவு ரவியும் அவரின் மைத்துனர் ஜெகதீஸ் குமார் மது அருந்தியுள்ளனர். எப்போதும், ஜெகதீஸ் குமாரகுக்கு, ரவி பணம் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. ஆனால் அன்றைய தினம் ஜெகதீஸ் குமாருக்கு, ரவி பணம் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஸ் குமார், ரவியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் கடுமையான காயங்கள் ஏற்பட்ட ரவி, சுயநினைவற்ற நிலையில் மயங்கி கீழே விழுந்துள்ளார். 


இதனையடுத்து வீட்டிற்கு வந்த ரவியின் மனைவி கனகலட்சுமி, ரவியின் நிலையை பார்த்துவிட்டு உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தார். கடந்த சில நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி நேற்று திடீரென உயிரிழந்தார். ரவி இறந்ததையடுத்து ஜெகதீஸ் குமார் மீது கொலையாகாத மரணமாக பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜெகதீஸ் குமார் கொலை செய்யும் நோக்கத்துடன் ரவியை தாக்கவில்லை என்பதால் அவர் மீது கொலையாகாத மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ரவி உயிரிழந்த விவரத்தை கேள்விப்பட்ட ஜெகதீசன் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதில் சம்பந்தப்பட்ட ஜெகதீஷ் குமார் மீது ஏற்கெனவே 9 வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் 8 மாதங்களுக்கு முன்பு அவர் மீது ஒரு குற்றவழக்கு சம்பந்தமாக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. ஆனால், போலீஸார் அவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close