[X] Close

உயிருள்ளவரை சசிகலாதான் தலைவி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

Former-Minister-Senthil-Balaji-clarification

உயிர் உள்ளவரை சசிகலா தலைமையிலான அணியில்தான் இருப்பேன் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


Advertisement

சசிகலா தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓபிஎஸ் அணிக்கு ஆதரவளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து விளக்கமளித்துள்ள செந்தில் பாலாஜி, உயிர் உள்ளவரை சசிகலா தலைமைக்கே ஆதரவளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணிக்கு தாம் ஆதரவளிக்க இருப்பதாக தேவையில்லாமல் வதந்தி பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா தலைமையிலான அரசில் அமைச்சராகப் பதவி வகித்த செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ ஆவார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close