Published : 13,Mar 2017 08:15 AM

அதிமுக ஆட்சியை அகற்ற திமுக போராடும்: ஸ்டாலின்

AIADMK-and-DMK-are-fighting-to-overthrow-the-regime--Stalin

அதிமுக ஆட்சியை அகற்ற, திமுக தொடர்ந்து போராடும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள், தட்டுப்பாடு இன்றி வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று போராட்டம் நடத்தினர். மதுரவாயல், மண்ணடி உள்ளிட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைதாகி சமுதாய நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டவர்களை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய ஸ்டாலின், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்தார். தமிழகத்தில் செயல்பட முடியாத அரசு நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், இந்த அ‌ரசை அகற்ற திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தும் எனவும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்