Published : 11,Apr 2018 11:05 AM

அஜித் படத்தில் ‘தாரைத்தப்பட்டை’ ஆர்கே சுரேஷ்?

RK-Suresh-is-not-part-of-Ajith-Kumar---s----Viswasam---

அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாக வந்த செய்திக்கு சுரேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

நான்காவது முறையாக அஜித்தை இயக்குநர் சிவா இயக்கவுள்ளார். இந்தப் படம் இந்த மாதம் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திரைத்துறை வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்பு தள்ளிப் போய்விட்டது. அதனால் அஜித் தன் சொந்த ஹாபியில் இறங்கிவிட்டார். இயக்குநர் சிவாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதை வைத்து அவர் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்க உள்ளதாக பலர் செய்தி வெளியிட்டனர். அது குறித்து சுரேஷும் இதுவரை மறுப்பு தெவிக்காமல் இருந்தார். ஏற்கெனவே போஸ் வெங்கட் நடிப்பது உறுதியாகி இருந்த நிலையில் இவரும் நடிக்க இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் பற்றி விளக்கம் அளித்துள்ளார் ஆர்.கே சுரேஷ். அந்தப் படம் சகஜமான ஒரு சந்திப்பின் போது எடுக்கப்பட்டது என்றும் ‘விசுவாசம்’ படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் படத்தில் இதுவரை நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பிராமையா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம் படத்தை தயாரிக்கிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்