[X] Close

விவசாயிகள் மரணத்தை கொச்சைப்படுத்துவதா? முத்தரசன் கண்டனம்

Farmers-obscene-death--Mutharasan-Condemned

விவசாயிகளின் உயிரிழப்பு தொடர்பான தமிழக அமைச்சர்களின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


Advertisement

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முதுமை, நோய், உடல் உபாதைகள் காரணமாக விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக அமைச்சர்கள் கூறியிருப்பது மிகவும் தவறானது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். இரு அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுகளை கண்டிப்பதுடன், விவசாயிகளின் துயர் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.‌


Advertisement

Advertisement

Advertisement
[X] Close