[X] Close

தனுஷையும் சிவகார்த்திகேயனையும் சேர்த்து வைத்த அறவழிப் போராட்டம்

Dhanush-Sivakarthikeyan-put-an-end-to-rumours-at-the-Kollywood-protest

தமிழ்த்திரை உலகில் வளர்ந்து வந்த வதந்திக்கு கூட்டாக சேர்ந்து தனுஷூம், சிவகார்த்திகேயனும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

தனுஷின் ‘3’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அதிக வெளிச்சத்தை சம்பாதித்தவர் சிவகார்த்திக்கேயன். இந்தப் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது பெரிய அளவுக்கு இருவரும் நட்பாக வலம் வந்தனர். தமிழ் சினிமாவில் தனக்கு யாரும் நண்பர்களே இல்லை என்று கூறிய தனுஷ், சினிமா உலகில் சிவகார்த்திகேயன் தனக்கு தம்பி என்றும் குறிப்பிட்டார். அதன் பிறகு வசூல் மன்னனாக திரை உலகில் வளர்ந்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தார் சிவா. அப்போது முதலே தனுஷ்-சிவா உரசல் உண்டானது. இருவரும் பிரிந்துவிட்டதாகவும் பேசப்பட்டது. ஆனால் இதை சிவா மறுத்தார். தனுஷ் அதை பற்றி பேசுவதையே தவிர்த்தார். 

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் கேட்டு நடைபெற்ற அறவழிப்போராட்டம் இவர்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைத்துள்ளது. போராட்டத்திற்கு வந்த தனுஷை அழைத்து தனக்கு அருகில் அமர வைத்தார் சிவா. பின்பு அவர் விஜய் அருகில் உட்கார, அதையடுத்து சிவா உட்கார்ந்தார். இடையில் இருந்த விஜய் அதிகமாக ஒன்றும் பேசிக் கொள்ளவே இல்லை. ஆனால் விஜய்யை மையமாக வைத்து மணிக்கணக்கான தனுஷூம் சிவாவும் பேசிக் கொண்டே இருந்தனர். இதனால் இருவருக்குள்ளும் இருக்கும் கசப்புணர்வு பற்றிய வதந்திக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக திரை உலகில் செய்தி வலம் வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close