[X] Close

அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி ஊழியர் பலி!

Electricity-Worker-Death-for-Electric-shock

கடலூரில் மின்கம்பம் அமைக்கும் பணியின் போது, மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார். 

நெய்வேலியை அடுத்த வெளிக்கூனங்குறிச்சி பகுதியில் மின்கம்பத்தை அகற்றி, வேறொரு மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில், ஒட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் ஒப்பந்தத் தொழிலாளராக பணியாற்றி வந்தார். அப்போது, எதிர்ப்பாராத விதமாக மின்பாதைக்கும் மின்சாரம் கொடுக்கப்பட்டதால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சரத்குமார் உயிரிழந்தார். 

போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய, ஒப்பந்த நிறுவனத்தையும், வேலை நடைபெற்று கொண்டிருப்பதை அறியாமல் மின் இணைப்பு கொடுத்த மின்வாரியத்தை கண்டித்தும் ‌மக்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக மறியலில் ஈடுபட்டனர். அத்துடன் தாமதமாக பேச்சுவார்த்தை ‌நடத்த வந்த வட்டாட்சியர் வாகனமும் சிறை பிடிக்கப்பட்டது.
 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close