Published : 27,Mar 2018 03:41 AM
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு: மழையிலும் தொடரும் மாணவர்களின் போராட்டம்..!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மழையிலும் அவர்களின் தொடர்கிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியார்புரம் கிராம மக்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்டம் முழுவதும் பரவலாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே இந்திய மாணவர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தூத்துக்குடியில் மழை பெய்து வரும் நிலையில், மாணவர்கள் மழையிலும் தங்களின் போராட்டத்தை தொடர்கின்றனர்.
முன்னதாக தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், மண்ணுக்கும், மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால், அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.