[X] Close

தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை !

Baby-elephant-felt-into-water

கோவை மாவட்டம் பெரியதடாகம் அருகே 10 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குட்டி யானையை வேட்டை தடுப்பு காவலர்கள் மீட்டு இன்று அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

கோவை பெரியதடாகம் அனுபாவி சுப்பிரமணியர் கோயில் அருகே உள்ள 10 அடி உயர தொட்டியில் தண்ணீர் குடிக்க இன்று அதிகாலை இரு குட்டிகள் உள்ளிட்ட 5 யானைகள் கொண்ட கூட்டம் வந்தது. அதில்  பிறந்து 1 மாதமே ஆன யானை குட்டி திடீரென தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. குட்டி யானையை மீட்க முடியாமல் தாய் யானை பிளிறியது. சத்தம் கேட்ட வனத் துறையினர், வனச்சரகர்  சுரேஷ்குமார் தலைமையில்  சம்பஇடத்துக்குச் சென்று குட்டி யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

எனினும் மற்ற யானைகள் வனத்துறையினரை குட்டி யானையின் பக்கம் நெருங்க விடாமல் தடுத்தன. மற்ற யானைகளை விரட்டிவிட்டு ஜேசிபி இயந்திர உதவியுடன் தண்ணீர் தொட்டியில் இருந்து யானை குட்டியை மீட்ட வனத்துறையினர் அதன் கூட்டத்துடன் சேர்த்து வனத்துக்குள் அனுப்பி வைத்தனர். அதன், பின் தாயனையுடன் மகிழ்ச்சியுடன் சேர்ந்தது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close