காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக 4 மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைப்பெற்று வருகிறது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். கர்நாடக தரப்பில் ரத்னபிரபா, புதுச்சேரியில் இருந்து அஸ்வனி குமார், கேரளா தரப்பில் நளினி ஆகியோரும் மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்
காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது. இதில் 4 வாரங்கள் முடிந்தநிலையில், அடுத்த நடவடிக்கை பற்றி முடிவெடுக்க ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி