[X] Close

போக்குவரத்து நிறுத்தப்படும் விவகாரம்: நீதிமன்றம் என்ன சொல்கிறது

Traffic-stops-Issues--What-the-court-says

ஆளுநர், தலைமை நீதிபதி, முதலமைச்சர் ஆகியோரின் வாகனங்கள் செல்லும் போது காவல்துறையால் பத்து நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்படாது என நம்புவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் மருத்துவமனைக்கு அவசரமாகச் செல்லும்போது, அவ்வழியாக முதலமைச்சர் வருவதாகக் கூறி ராயப்பேட்டை அருகே தனது காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது என மறுத்த நீதிபதிகள், ஆளுநர், தலைமை நீதிபதி மற்றும் முதலமைச்சர் செல்லும்போது ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு மேலாக வாகனங்கள் நிறுத்தப்படாது என நம்புவதாக தெரிவித்துள்ளனர். அதே நேரம், குடியரசுத் தலைவர், பிரதமர் வருகையின்போது இந்த நடைமுறை பொருந்தாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close